விவசாயி தற்கொலை
பழனியை அடுத்த கீரனூர் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பழனி:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா கள்ளம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி(வயது 58). விவசாயி. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 14-ந்தேதி வீட்டைவிட்டு வெளியேறினார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கீரனூர் அருகில் உள்ள கல்துறை பகுதியில் ஒரு தனியார் தோட்டத்தில் விஷம் குடித்த நிலையில் அவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.