கொரோனாவால் புழல் சிறை கைதி சாவு

கொரோனாவால் புழல் சிறை கைதி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

Update: 2022-02-22 10:59 GMT
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் கோட்டி என்ற கோட்டீஸ்வரன்(வயது 52). இவர், திருவொற்றியூர் பகுதியில் நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 2018-ம் ஆண்டு முதல் புழல் தண்டனை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இவருக்கு கடந்த 9-ந்தேதி கொரோனா தொற்று உறுதியானது. இதற்காக அவர், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கைதி கோட்டீஸ்வரன் உயிரிழந்தார் இதுபற்றி புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்