ஈரோடு நேதாஜி மார்க்கெட்டில் காய்கறி வரத்து அதிகரித்ததால் விலை குறைந்தது
ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் காய்கறி வரத்து அதிகரித்ததால் விலை குறைந்தது.
ஈரோடு
ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் காய்கறி வரத்து அதிகரித்ததால் விலை குறைந்தது.
காய்கறி மார்க்கெட்
ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் வ.உ.சி. பூங்கா மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. அங்கு 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகளும், சுமார் 50 பழக்கடைகளும் உள்ளன. தாளவாடி, அந்தியூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், ஓசூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மார்க்கெட்டுக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கிறார்கள். மேலும், சில்லரை விற்பனையும் நடக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்கறிகளின் விலை உச்சத்தை எட்டியது. தக்காளி, பீட்ரூட், முள்ளங்கி என அனைத்து காய்கறிகளின் விலையும் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக தக்காளி, கத்தரிக்காய் ரூ.100 கடந்து விற்பனை செய்யப்பட்டது.
விலை குறைந்தது
இந்தநிலையில் காய்கறிகள் வரத்து அதிகமாக உள்ளதால் விலை குறைந்து உள்ளது. தக்காளியின் விலை கிடுகிடுவென குறைந்தது. நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் மற்ற காய்கறிகளின் விலையும் குறைந்து உள்ளது.
ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் நேற்று விற்பனையான காய்கறிகளின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-
பீட்ரூட் - ரூ.30, பீன்ஸ் - ரூ.20, பச்சை பட்டாணி - ரூ.60, முள்ளங்கி - ரூ.20, வெண்டைக்காய் - ரூ.30, கத்தரிக்காய்-ரூ.80, முருங்கைக்காய்-ரூ.150, புடலைங்காய் - ரூ.30, பீர்க்கங்காய் - ரூ.30, பாகற்காய் - ரூ.30, அவரைக்காய் - ரூ.50, முட்டைகோஸ் - ரூ.35, பச்சை மிளகாய் - ரூ.80, சின்ன வெங்காயம் - ரூ.30, பெரிய வெங்காயம் - ரூ.35.
கேரட் வரத்து குறைவு காரணமாக அதன் விலை உயர்ந்து உள்ளது. ரூ.60-க்கு விற்பனையான ஒரு கிலோ கேரட் நேற்று ரூ.100-க்கு விற்பனையானது.