நெல்லை :
நெல்லை மாவட்டத்தில் மது பாட்டில்களை பதுக்கி விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை தீவிர சோதனையில் ஈடுபட்ட போலீசார், சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 26 பேரை கைது செய்தனர். விற்பனைக்காக வைத்திருந்த 679 பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.