பாளையங்கோட்டையில் ரெயிலில் அடிபட்டு முதியவர் பலி

ரெயிலில் அடிபட்டு முதியவர் இறந்து கிடந்தார்

Update: 2022-02-21 20:04 GMT
நெல்லை:
நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரெயில்வே தண்டவாளத்தில் பாளையங்கோட்டை தியாகராஜ நகர் பகுதியில் நேற்று காலை முதியவர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசார் அங்கு சென்று முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர், பாளையங்கோட்டை ரகுமத் நகரை சேர்ந்த அப்துல் சலாம் (வயது 86) என்பதும், நேற்று காலை அந்த பகுதியில் தண்டவாளத்தை கடந்து சென்றபோது அந்த வழியாக வந்த ரெயில் மோதி அப்துல் சலாம் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்