பாளையங்கோட்டையில் போலீஸ்காரரை தாக்கியதாக வாட்ஸ்-அப் தகவலால் பரபரப்பு
போலீஸ்காரரை தாக்கியதாக வாட்ஸ்-அப் தகவலால் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
நெல்லை:
பாளையங்கோட்டையில் ஒரு பெண்ணுடன், ஒரு போலீஸ்காரர் காரில் இருந்ததாக கிடைத்த தகவலின் பேரில் அந்தப்பெண்ணின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த போலீஸ்காரரையும், அந்த பெண்ணையும் தாக்குவது போன்ற வீடியோ வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வாட்ஸ்-அப் வீடியோ நெல்லை மாநகர பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து நெல்லை மாநகர போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.