குடிநீர் கேட்டு கிராம மக்கள் மறியல்

சிவகாசி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-02-21 19:25 GMT
சிவகாசி, 
சிவகாசி மாநகராட்சியையொட்டி செங்கமலநாச்சியார்புரம் உள்ளது. இந்த பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் போதிய குடிநீர் வசதி இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு அப்பகுதி மக்கள் திடீரென சாலை மறியல் செய்தனர். இதனால் சிவகாசி- செங்கமலநாச்சியார்புரம் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த திருத்தங்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியல் செய்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் கூறி தேவையான தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். அதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியலால் அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்