அகில இந்திய அளவிலான டென்னிகாய்ட் போட்டி

சிவகாசி அருகே அகில இந்திய அளவிலான டென்னிகாய்ட் போட்டி நடைபெற்றது.

Update: 2022-02-21 19:22 GMT
சிவகாசி, 
சிவகாசி அருகே அகில இந்திய அளவிலான டென்னிகாய்ட் போட்டி நடைபெற்றது. 
டென்னிகாய்ட் போட்டி 
சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் அகில இந்திய ஓபன் டென்னிகாய்ட் போட்டி நடைபெற்றது. ஹட்சன் டென்னிகாய்ட் அகாடமி சார்பில் நடைபெற்ற இந்த போட்டியில் தமிழகம், மேற்குவங்கம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 320 வீரர்கள் கலந்து கொண்டனர். 8 பிரிவாக போட்டிகள் நடத்தப்பட்டது. 
இதில் சப்-ஜுனியர் ஆண்கள் பிரிவில் கார்த்திக்ராஜா முதல் இடத்தையும், அஸ்வின் 2-வது இடத்தையும், சப்-ஜுனியர் ஆண்கள் இரட்டையர் பிரிவில் கார்த்திக்ராஜா-அஸ்வின் முதல் இடத்தையும், செல்வவிகாஸ்-அஸ்வந்த் 2-வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்தனர். 
சப்-ஜுனியர் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஷனிஸ் முதல் இடத்தையும், வித்யா 2-வது இடத்தையும், சப்-ஜுனியர் பெண்கள் இரட்டையர் பிரிவில் ஷனிஸ்-அஸ்மிதா முதல் இடத்தையும், வித்யா-கீர்த்தனா 2-வது இடத்தையும் பெற்றனர். ஜுனியர் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரிகிருஷ்ணன் முதல் இடத்தையும், வினய்குமார் 2-வது இடத்தையும் பெற்றனர். 
பரிசளிப்பு விழா 
ஜுனியர் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வினய்குமார்-ராவ் முதல் இடத்தையும், அரிகிருஷ் ணன்-ஜோதி 2-வது இடத்தையும் பெற்றனர். ஜூனியர் பெண்கள் ஒற்றையர் பிரிவில் மகேஸ்வரி முதல் இடத்தையும், தர்ஷினி 2-வது இடத்தையும், ஜுனியர் பெண்கள் இரட்டையர் பிரிவில் மகேஸ்வரி- ஹரிணி முதல் இடத்தையும், வைவித்யா-தர்ஷினி 2-வது இடத்தையும், சீனியர் பெண்கள் பிரிவில் மகேஸ்வரி முதல் இடத்தையும், ஹரிதா 2-வது இடத்தையும், சீனியர் ஆண்கள் பிரிவில் வைரமுத்து முதல் இடத்தையும், முத்து செல்வம் 2-வது இடத்தையும் பெற்றனர்.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தொழில் அதிபர் இதயம் முத்து கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு மொத்தம் ரூ.4 லட்சம் ரொக்க பரிசு மற்றும் பதக்கங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் ஹட்சன் அக்ரோ சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்