கண்மாயில் மண் அள்ளிய 2 பேர் கைது
கண்மாயில் மண் அள்ளிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கமுதி,
கமுதி அருகே கோவிலாங்குளம் பகுதியில் வேடங்கூட்டம் கண்மாயில் அரசு அனுமதியின்றி கண்மாய் மண் அள்ளப் படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. சப் -இன்ஸ்பெக்டர் சத்திய நாராயணன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று கண்மாய் மண் அள்ளிக் கொண்டிருந்த மோயங்குளம் முனியசாமி (வயது42), மங்களம் கிராமத்தை சேர்ந்த தயானந்தன் (22) ஆகிய 2 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்த டிராக்டர் மற்றும் ஜே.சி.பி. ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கொம்பூதி கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் சண்முகநாதன் கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.