தியாகதுருகம் அருகே பள்ளி மாணவ மாணவிகள் திடீர் சாலை மறியல்

தியாகதுருகம் அருகே அறிவியல் பாட ஆசிரியரை இட மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவ-மாணவிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது

Update: 2022-02-21 16:15 GMT
கண்டாச்சிமங்கலம்

இடமாற்றம்

தியாகதுருகம் அருகே உள்ள சூளாங்குறிச்சி கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு சூளாங்குறிச்சி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 
இந்த நிலையில் இப்பள்ளியில் அறிவியல் பாடம் நடத்தி வரும் பட்டதாரி ஆசிரியர் பன்னீர்செல்வம் வேறொரு பள்ளிக்கு பணிநிரவல் மூலம் இடம் மாறுதலாகி செல்ல இருக்கிறார். 

சாலை மறியல்

இதை அறிந்து ஆத்திரம் அடைந்த மாணவ-மாணவிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அறிவியல் பாட ஆசிரியர் பன்னீர்செல்வத்தை இடமாற்றம் செய்யக் கூடாது என கோஷம் எழுப்பினர்.இதனால் சூளாங்குறிச்சி - தியாகதுருகம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த தியாகதுருகம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு பள்ளிக்கு சென்றனர். இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 
ஆசிரியரை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவ-மாணவிகள் சாலை மறியல் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்