ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

நாகையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-02-21 16:10 GMT
வெளிப்பாளையம்:
நாகையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
உத்தரபிரதேசத்தில்  விவசாயிகள் மீது காரை ஏற்றி கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட மத்திய மந்திரியின் மகன் அஜீஸ் மிஸ்ராவை ஜாமீனில் விடுதலை செய்ததை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நாகை அவுரித்திடலில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாபுஜி தலைமை தாங்கினார். 
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட தலைவர் சரபோஜி, நாகைமாலி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் மாசிலாமணி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். 
கோஷங்கள்
உத்திரபிரதேசம் லக்கிம்பூர் கேரியில்  விவசாயிகளை காரை ஏற்றி கொன்றதாக கைது செய்யப்பட்ட மத்திய மந்திரியின் மகன் அஜீஸ்மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை கண்டிப்பது. அவரை மத்திய மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சாமிநடராஜன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்