பெண்ணை கற்பழிக்க முயன்ற வாலிபர் கைது
தலைஞாயிறு அருகே பெண்ணை கற்பழிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வாய்மேடு:
தலைஞாயிறை அடுத்த நாகமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பாரதி. இவருடைய மகன் பவித்திரன்(வயது20). கோடி விநாயக நல்லூரை சேர்ந்த 45 வயதான பெண் ஒருவருக்கு, ஏற்பு கட்டளை கிராமத்தில் விவசாய நிலம் உள்ளது. இந்த பெண் நேற்று தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். அப்போது மோட்டார் என்ஜின் இயங்காததால் அங்கு நின்றுகொண்டிருந்த பவித்திரனை உதவிக்கு அழைத்து உள்ளார். அங்கு சென்ற பவித்திரன், அந்த பெண்ணை கற்பழிக்க முயன்றுள்ளார். இதில் அந்த பெண்ணுக்கு கழுத்து மற்றும் உடம்பில் காயம் ஏற்பட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அமைதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் தலைஞாயிறு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மலர்கொடி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பவித்திரனை கைது செய்து வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.