அளக்கரை குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

கோத்தகிரியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க அளக்கரை குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்

Update: 2022-02-21 15:07 GMT
கோத்தகிரி

கோத்தகிரியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க அளக்கரை குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். 

அளக்கரை குடிநீர் திட்டம்

கோத்தகிரி நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரூ.10½ கோடியில் அளக்கரை குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற் காக அளக்கரை பகுதியில் செல்லும் ஓடையை மறித்து தரைமட்ட நீர் தேக்க ெதாட்டி கட்டப்பட்டது. பின்னர் அங்கிருந்து கோத்தகிரி வரை நிலத்தில் குழாய்களை பதித்து 7 இடங்களில் நீருந்து மோட்டார் அறை களும் கட்டப்பட்டன. 

மேலும் கோத்தகிரியில் உள்ள உயரமான பகுதியான சக்திமலையில் சுத்தி கரிப்பு நிலையம் கட்டப்பட்டது. அங்கு 16 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப் பட்ட தண்ணீரை வினியோகத்துக்கு தேக்கி வைக்க 2 நீர்த் தேக்க தொட்டி களும் கட்டப்பட்டன. 

இதுதவிர குடிநீர் வினியோகம் செய்ய வசதியாக கோத்தகிரி நேரு பூங்கா வளாகத்தில் ரூ.50 லட்சத்தில் நீர்த்தேக்க தொட்டி யும் கட்டப்பட்டன.  

தற்காலிகமாக நிறுத்தம்

ஒவ்வொரு நீர் உந்து அறையிலும் 60 குதிரைதிறன் கொண்ட மின் மோட்டார்களும் பொருத்தப்பட்டன. இந்த 7 மின் மோட்டார்களும் ஒரே நேரத்தில் இயங்கினால் மட்டுமே, அளக்கரை பகுதியில் இருந்து சக்திமலை சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் வந்து சேரும்.

இந்தநிலையில் நீர் உந்து அறைகள் அமைந்துள்ள சில பகுதிகளில் மின் அழுத்த குறைபாடு காரணமாக மோட்டார்கள் அடிக்கடி பழுதானது. இதனால் அளக்கரையில் இருந்து கோத்தகிரிக்கு தண்ணீரை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து தண்ணீரை கோத்தகிரிக்கு கொண்டு வருவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.

குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

இதன் காரணமாக கோடநாடு அருேக உள்ள ஈளாடா தடுப்பணையில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு கோத்தகிரி பகுதிக்கு வினியோகம் செய்யப் பட்டு வருகிறது. தற்போது இந்த தடுப்பணையில் தண்ணீர் வேகமாக குறைந்து வருவதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது.

எனவே கடந்த 10 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள அளக்கரை கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து குடிநீரை எடுத்து கோத்தகிரி பகுதிக்கு வினியோகம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.  இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- 

சீரான வினியோகம்

தற்போது கோடைகாலம் தொடங்கிவிட்டது. இதனால் ஏராளமான நீர்நிலைகளில் தண்ணீர் குறைந்து வருகிறது. குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவும் அதிகரித்து உள்ளதால் அணைகள், தடுப்பணைகளின் நீர்மட்டம் நாளுக்குநாள் வேகமாக குறைந்து வருகிறது. 

எனவே மீண்டும் அளக்கரை கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்றினால் மட்டும்தான் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க முடியும். இதற்காக நீர் உந்து நிலையங்களுக்கு சீரான மின்சாரம் வழங்கி மின்அழுத்த குறைபாட்டை தடுக்க வேண்டும். அத்துடன் பழுதான மின்மோட்டார்களை உடனடியாக சரிசெய்து தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்