நாட்டறம்பள்ளி அருகே வீட்டுக்குள் புகுந்த 5 அடி நீள நல்ல பாம்பு பிடிபட்டது
நாட்டறம்பள்ளி அருகே வீட்டுக்குள் புகுந்த 5 அடி நீள நல்ல பாம்பு பிடிபட்டது.
ஜோலார்பேட்டை
நாட்டறம்பள்ளியை அடுத்த சோமநாயக்கன்பட்டி அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபால். இவரின் மனைவி நாகரத்தினம். அவர்களின் வீட்டுக்குள் நேற்று காலை 5 அடி நீள நல்ல பாம்பு நுழைந்தது. அப்போது வீட்டில் இருந்த அனைவரும் அலறியடித்து வெளியே ஓடினர்.
இதுகுறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் (பொறுப்பு) மணிகண்டன் தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் விரைந்து வந்து, வீட்டுக்குள் நுழைந்த நல்ல பாம்பை பிடித்து, அருகில் உள்ள காட்டில் விட்டனர்.