டிராக்டர்-மோட்டார் சைக்கிள் ேமாதல்; தொழிலாளி பரிதாப சாவு
வாடிப்பட்டி அருகே டிராக்டர்-மோட்டார் சைக்கிள் மோதலில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
வாடிப்பட்டி,
வாடிப்பட்டி அருகே டிராக்டர்-மோட்டார் சைக்கிள் மோதலில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
டிராக்டர் மோதியது
வாடிப்பட்டி அருகே சடையம்பட்டி பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 24) இவரும் நரிமேட்டை சேர்ந்த முருகன் (49). இருவரும் மதுரை அரசரடியில் உள்ள பர்னிச்சர் கடையில் வேலை செய்து வந்தனர். தினந்தோறும் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஒன்றாக வேலைக்கு சென்று வருவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 15-ந்தேதி வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.அப்போது தனிச்சியம் சேவை சாலையில் எதிரே வந்த டிராக்டர், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
பரிதாப சாவு
இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி முருகன் நேற்று பரிதாபமாக இறந்தார்.
இது சம்பந்தமாக வாடிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.