விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கூத்தாநல்லூர்:
சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
கூத்தாநல்லூர் அருகே உள்ள வேளுக்குடியில் பிரசித்தி பெற்ற அச்சம் தீர்த்த விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் விநாயகருக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள்பொடி என்பன உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் விநாயகர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதேபோல் புனவாசல் மழுப்பெருத்த விநாயகர் கோவில், உச்சுவாடி நர்த்தன விநாயகர் கோவில், லெட்சுமாங்குடி கலிதீர்த்த விநாயகர் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நடந்தன. இதில் திரளான பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
நீடாமங்கலம்
நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாக போற்றப்படும் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவிலில், சங்கடஹர சதுர்த்தியையொட்டி கலங்காமற்காத்த விநாயகர் சன்னதியில் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் மகாமாரியம்மன் கோவிலில் எழுந்தருளியுள்ள சதுர்வேத விநாயகர், காமராஜர் காலனி விநாயகர், சந்தானராமர் கோவிலில் உள்ள தும்பிக்கையாழ்வார் விநாயகர், காசிவிசுவநாதர் கோவிலில் உள்ள விநாயகர் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தமிழக அரசின் கொரோனா வழிகாட்டல்படி பூஜைகள் நடைபெற்றது. அனைத்து கோவில்களிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர்.
திருமக்கோட்டை
சங்கடஹர சதுர்த்தியையொட்டி திருமக்கோட்டை ராஜவிநாயகர் மற்றும் ஞானசித்தி விநாயகர் கோவில்களில் கொழுக்கட்டை படைத்து, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதேபோல ஞானசித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.