மதுரையில் புதிதாக 12 பேருக்கு கொரோனா

மதுரையில் நேற்று புதிதாக 12 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

Update: 2022-02-20 19:43 GMT
மதுரை,

மதுரையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அதன்படி மதுரையில் நேற்று புதிதாக 12 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் மதுரையில் இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்து 949 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 36 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து வீட்டிற்கு சென்றனர். இதுவரை 89 ஆயிரத்து 557 பேர் குணம் அடைந்திருக்கிறார்கள். தற்போது சிகிச்சையில் 157 பேர் இருக்கிறார்கள். நேற்று மதுரையில் யாரும் உயிரிழக்கவில்லை.

மேலும் செய்திகள்