வேன் மோதி என்ஜினீயரிங் மாணவர் பலி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வேன் மோதி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலியானார். மேலும் இந்த விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வேன் மோதி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலியானார். மேலும் இந்த விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
வேன் மோதியது
ஆந்திர மாநிலம் குளிப்பாட்டி பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஜெயபால்சன் (வயது 20). கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரவீன் (18), கோதாவரி மாவட்டம் துனியை சேர்ந்தவர் மனோஜ்(20). இவர்கள் 3 பேரும் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தனர். இவர்கள் 3 பேரும் கிருஷ்ணன்கோவில் அருகே தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தனர். இந்த நிலையில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் கிருஷ்ணன்கோவில் வத்திராயிருப்பு சாலையில் இவர்கள் 3 பேரும் சென்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேன் ஒன்று அவர்கள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
மாணவர் சாவு
இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயமடைந்த ஜெயபால்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பிரவீன், மனோஜ் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்து தொடர்பாக கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.