லாரி மோதி தொழிலாளி பலி

ஏழாயிரம்பண்ணை அருகே லாரி மோதி தொழிலாளி பலியானார்.

Update: 2022-02-20 19:20 GMT
தாயில்பட்டி, 
ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள கீழ செல்லையாபுரத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது38). பட்டாசு தொழிலாளி. இவர் தனது குழந்தைகளுக்கு கீழ செல்லையாபுரத்தில் உள்ள ஓட்டலில் உணவு வாங்கி விட்டு மோட்டார்சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அதில் ஆனந்தராஜ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்  மேல் சிகிச்சைக்காக மதுரை ஆஸ்பத்திரிக்கு  அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஆனந்தராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஆனந்தராஜின் மனைவி ராஜலட்சுமி (35) ஏழாயிரம்பண்ணை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்