தொண்டி,
தொண்டி அருகே உள்ள கீழசித்தூர் வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியராஜ் (வயது 33). இவர் தொண்டிக்கு சென்றுவிட்டு அவரது சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது புதுப்பட்டினம் கிராமத்தின் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் எதிரே வந்த லாரி மோதியதில் படு காயமடைந்த சத்தியராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சத்தியராஜின் உடலை கைப்பற்றி திருவாடானை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் தொண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.