வாணியம்பாடி வாக்கு எண்ணும் மையத்தில் 150 கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு

வாணியம்பாடியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் 150 கண்காணிப்பு கேராமக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது. இங்கு தேர்தல் பார்வையாளர், கலெக்டர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Update: 2022-02-20 18:11 GMT
வாணியம்பாடி

வாணியம்பாடியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் 150 கண்காணிப்பு கேராமக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது. இங்கு தேர்தல் பார்வையாளர், கலெக்டர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கலெக்டர் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 4 நகராட்சிகளிலும்,  ஆலங்காயம், உதயேந்திரம், நாட்டறம்பள்ளி ஆகிய 3 பேரூராட்சிகளிலும் நேற்று முன்தினம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. மாவட்ட முழுவதும்  69 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்த வாக்குகள் நாளை (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகிறது.

வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்  வாணியம்பாடியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையமான மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இதனை திருப்பத்தூர் மாவட்ட தேர்தல் பார்வையாளர் பிரதீப் குமார், கலெக்டர் அமர் குஷ்வாஹா ஆகியோர் பார்வையிட்ட பின்னர் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு சீல் வைத்தனர். 

150 கேமராக்கள்

இந்த அறைகள் முன்பாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கல்லூரி வளாகம் முழுவதும் 150-க்கும் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 
நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

மேலும் செய்திகள்