ஜவ்வாது மலையில் உருட்டுக் கட்டையால் அடித்து மனைவி கொலை. மேஸ்திரி கைது

குடும்ப தகராறில் மனைவியை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலை செய்த மேஸ்திரியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-02-20 18:10 GMT
திருப்பத்தூர்

குடும்ப தகராறில் மனைவியை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலை செய்த மேஸ்திரியை போலீசார் கைது செய்தனர்.

குடும்ப தகராறு

திருப்பத்தூர் தாலுகா ஜவ்வாதுமலை புதூர்நாடு பெரும்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 38), கோயமுத்தூரில் மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி (30). திருமணமாகி 8 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை உள்ளனர்.

கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கோயமுத்தூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு காளியப்பன் ஊருக்கு வந்தார். அப்போது கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

மனைவி அடித்துக்கொலை

இதில் ஆத்திரமடைந்த காளியப்பன், வீட்டிலிருந்த உருட்டுக்கட்டையை எடுத்து மனைவி புவனேஸ்வரி தலையில் அடித்து உள்ளார். அதில் ரத்த வெள்ளத்தில் புவனேஸ்வரி மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து புவனேஸ்வரியின் தாய் காளியம்மாள் திருப்பத்தூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்  காளியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்