தெரு நாய்கள் கடித்து புள்ளிமான் சாவு
தெரு நாய்கள் கடித்து புள்ளிமான் இறந்தது.
கோட்டைப்பட்டினம்:
புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே உள்ள ஆர்.புதுப்பட்டினம் கிராமத்தில் காட்டுப்பகுதியில் புள்ளிமான் ஒன்று 2 நாட்களாக அப்பகுதியில் சுற்றி வந்தது. இதையடுத்து அந்த புள்ளிமானை அப்பகுதியில் உள்ள தெரு நாய்கள் விரட்டி சென்று கடித்தது. இதில் பலத்த காயமடைந்த புள்ளிமான் குறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில், வனத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து வருவதற்குள் புள்ளி மான் பரிதாபமாக இறந்தது. பின்னர் வனத்துறையினர் மானை கைப்பற்றி உடற்கூறு ஆய்வு செய்து அப்பகுதியில் புதைத்தனர்.