மோட்டாா் சைக்கிள் மோதி வாலிபர் பலி
வேதாரண்யம் அருகே மோட்டாா் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட கணக்கன்காடு பகுதியை சேர்ந்தவர் மணி (வயது34). சம்பவத்தன்று மணி அதே பகுதியைச் சேர்ந்த அன்பழகன் (35) என்பவர் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வேதாரண்யம் -திருத்துறைப்பூண்டி சாலையில் சென்றார். இவர்கள் பெட்ரோல் பங் அருகே சென்ற போது அந்த வழியாக வேம்பதேவன்காட்டைச் சேர்ந்த பழனிச்சாமி (34) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், மணி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அன்பழகன், மணி ஆகியோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மணியை திருவாரூா் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மணி சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.