பழுதடைந்த கோதவாடி நல்லட்டிபாளையம் சாலை
ிணத்துக்கடவு அருகே பழுதடைந்த கோதவாடி-நல்லட்டிபாளையம் சாலையால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து உள்ளனர்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே பழுதடைந்த கோதவாடி-நல்லட்டிபாளையம் சாலையால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து உள்ளனர்.
குண்டும், குழியுமான சாலை
கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நல்லட்டிபாளையம் கிராமத்திலிருந்து கோதவாடி, கிணத்துக்கடவு ஆகிய பகுதிக்கு வரும் தார்சாலை நீண்ட நாட்களாக பழுதடைந்து காணப்படுகிறது. குண்டும் குழியுமாக உள்ளதால் பகல் மற்றும் இரவு நேரங்களில் இந்த ரோட்டில் வரும் வாகன ஓட்டிகள், விவசாயிகள், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் மழை நேரங்களில் பழுதடைந்த சாலையில் தண்ணீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் பள்ளத்தில் இறங்கி விபத்து ஏற்பட்டு வருகிறது. சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு மேலாக சாலை ஆங்காங்கே பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
விரைந்து சீரமைக்க வேண்டும்
சாலை பழுதடைந்த நிலையில் உள்ளதால் பலமுறை பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். பொதுமக்களும், விவசாயிகளும், வாகன ஓட்டிகளும் பழுதடைந்த சாலையில் சிரமம் அடைந்து பயணம் செய்து வருகின்றனர். மேலும் விவசாய பொருட்களை கொண்டு செல்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. பழுதடைந்த நிலையில் உள்ள சாலையை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு சாலையை விரைந்து சீரமைத்து தர வேண்டும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.