எருமப்பட்டி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
எருமப்பட்டி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
எருமப்பட்டி:
எருமப்பட்டி அருகே உள்ள மேட்டுப்பட்டி ஊராட்சி வடுகப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் சக்திவேல் (வயது 20). இவர் டிப்ளமோ முடித்து விட்டு விவசாயம் பார்த்து வந்தார். இவர் சம்பவத்தன்று வாந்தி எடுத்துள்ளார். உடனே அவரது தந்தை சுப்பிரமணி கேட்டதற்கு நீங்கள் அடிக்கடி கடன் வாங்கி செலவு செய்ய வேண்டாம் என்று கூறியும், இதனால் மனமுடைந்த நான் தோட்டத்திற்கு அடிக்க வைத்திருந்த மருந்து (விஷம்) எடுத்து குடித்து விட்டதாக கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணி அக்கம் பக்கம் இருந்தவர்கள் உதவியுடன் மகனை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை சக்திவேல் இறந்தார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.