வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
திருச்செந்தூர் அருகே மது குடிக்க தாயார் பணம் தர மறுத்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே மது குடிக்க தாயார் பணம் தர மறுத்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வாலிபர்
திருச்செந்தூர் அருகே ராணிமகாராஜபுரம் மேலத்தெருவை சேர்ந்த முனியாண்டி மனைவி பேச்சியம்மாள். இவர்களுக்கு 4 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். இதில் 3-வது மகன் கிருஷ்ணபெருமாள் (வயது 21). இவருக்கு திருமணம் ஆகவில்லை. சென்னையில் ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் ஊருக்கு வந்திருந்தார். தாயாரிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். அதற்காக தாயாரும் ரூ.500 கொடுத்துள்ளார். அந்த பணத்தில் மது குடித்த அவர், பின்னர் மாலையில் வந்து மீண்டும் மது குடிக்க தாயாரிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு தாயார் பணம் தர மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் வீீட்டில் உள்ள பொருட்களை உடைத்துள்ளார். பின்னர் வீட்டிற்குள் உள்ள ஒரு அறைக்குள் சென்று கதவை பூட்டியுள்ளார். அவர் கோபத்தில் இருப்பதாக தாயார் உள்பட குடும்பத்தினர் இருந்துள்ளனர்.
தூக்கு போட்டு தற்கொலை
நீண்டநேரமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அறைக்கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு அவர் மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு இருந்ததை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
போலீசார் விசாரணை
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் தலைமையில் போலீசார் சம்பவ வீட்டுக்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.