தண்ணீரில் மூழ்கி சலவைத்தொழிலாளி சாவு
தண்ணீரில் மூழ்கி சலவைத்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டியை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 50). சலவைத்தொழிலாளி. இவர் நேற்று தேவதானப்பட்டி சில்லான்கரடு அருகே உள்ள மஞ்சளாறு வாய்க்காலில் துணிகளை துவைத்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து வாய்க்காலில் விழுந்த அவர் சிறிதுநேரத்தில் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தேவதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.