கஞ்சா வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்து

கோவில்பட்டியில் கஞ்சா வழக்கில் கைதான வாலிபர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்

Update: 2022-02-20 14:32 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் கஞ்சா விற்ற வழக்கில் கைதான வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கஞ்சா விற்ற வாலிபர்
கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் அருகில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட
 நாலாட்டின்புத்தூர் ரெயில்வே பீடர் ரோட்டை சேர்ந்த குணசேகரன் மகன் இசக்கிமுத்து (வயது 23). இவர் சிலநாட்களுக்கு முன்பு கோவில்பட்டி கூடுதல் பஸ்நிலையம் முன்பு கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார். அவரை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் பிடித்தனர். அவரிடம் இருந்து 8 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மேற்கு வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்து,  சிறையில் அடைத்தனர்.
குண்டர் சட்டம் பாய்ந்தது
இசக்கி முத்துவை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அளித்த அறிக்கையின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜூவுக்கு பரிந்துரை செய்தார். இதை தொடர்ந்து அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து தூத்துக்குடி பேரூரணி சிறையிலிருந்த இசக்கி முத்துவை குண்டர் தடுப்புச் சட்டத்தில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

மேலும் செய்திகள்