ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 55 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 55 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 3 ஆயிரத்து 173 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 64 பேருக்கு தொற்று உறுதியானது.
இந்தநிலையில் நேற்று புதிதாக 55 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 378 ஆக உயர்ந்தது. இதில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 619 பேர் குணமடைந்தனர். நேற்று மட்டும் 167 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். தற்போது 1,026 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 733 பேர் பலியாகி உள்ளனர்.