வாக்கு எந்திரத்தை உடைத்த தி.மு.க. வேட்பாளரால் பரபரப்பு

திருமங்கலத்தில் வாக்கு எந்திரத்தை உடைத்த தி.மு.க. வேட்பாளரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-02-19 20:52 GMT
திருமங்கலம்,

திருமங்கலத்தில் வாக்கு எந்திரத்தை உடைத்த தி.மு.க. வேட்பாளரால் பரபரப்பு ஏற்பட்டது.

வாக்கு எந்திரம் உடைப்பு

மதுரை மாவட்டம் திருமங்கலம் 2-வது வார்டில் தி.மு.க. சார்பில் ராம்குமார் என்பவரும், அ.தி.மு.க. சார்பில் கூழ்பாண்டி என்பவரும் போட்டியிடுகின்றனர். 
இந்த நிலையில் பதிவான ஓட்டு எண்ணிக்கையில் வித்தியாசம் இருப்பதாக தெரிவித்த புகாரின் பேரில், வேட்பாளர் என்ற முறையில் தி.மு.க.வை சேர்ந்த ராம்குமார் வாக்குப்பதிவு நடந்த அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்த வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்குப்பதிவு விவரங்களை அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டு்ள்ளார்.  
அப்போது, வாக்காளர்கள் பதிவு செய்யும் வாக்கிற்கும், எந்திரத்தில் பதிவான வாக்கிற்கும் ஒரு ஓட்டு வித்தியாசம் இருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அந்த எந்திரம் பழுடைந்ததாக கூறி, அதனை கீழே போட்டு அவர் உடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் வாக்குச்சாவடியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

வழக்குப்பதிவு

அதனை தொடர்ந்து, வாக்குச்சாவடி அலுவலர்கள் திருமங்கலம் போலீசில் புகார் செய்தனர். இந்த புகாரின் பேரில் தி.மு.க. வேட்பாளர் ராம்குமார் மீது திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த வாக்குச்சாவடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்