மாவட்டத்தில் 70.54 சதவீதம் வாக்குப்பதிவு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சேலம் மாவட்டத்தில் 70.54 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
சேலம்:-
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சேலம் மாவட்டத்தில் 70.54 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
வாக்குப்பதிவு
சேலம் மாவட்டத்தில் சேலம் மாநகராட்சி மற்றும் ஆத்தூர், நரசிங்கபுரம், மேட்டூர், எடப்பாடி, தாரமங்கலம், இடங்கணசாலை ஆகிய 6 நகராட்சிகள் மற்றும் 31 பேரூராட்சிகளில் உள்ள வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது.
மாவட்டம் முழுவதும் 1,519 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. அதன்பிறகு 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா நோயாளிகள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
70.54 சதவீதம்
மாவட்டத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி சேலம் மாநகராட்சி-12.49 சதவீதம், நகராட்சிகள்-13.07 சதவீதம், பேரூராட்சிகள்-13.81 சதவீதம் என சராசரியாக மொத்தம் 12.97 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. இதனை தொடர்ந்து காலை 11 மணி நிலவரப்படி மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் 27.60 சதவீதம், 1 மணி நிலவரப்படி 43.12 சதவீதம், 3 மணி நிலவரப்படி 56.37 சதவீதம், 5 மணி நிலவரப்படி 70.19 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.
வாக்குப்பதிவு முடிவில் சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தமாக 70.54 சதவீதம் பதிவாகி உள்ளது. இதில் மாநகராட்சியில் 64.36 சதவீதமும், 6 நகராட்சிகளில் சராசரியாக 76.64 சதவீதமும், 31 பேரூராட்சிகளில் 78.49 சதவீதமும் பதிவாகி உள்ளது. மேலும் இந்த தேர்தலில் மாநகராட்சியில் 2 லட்சத்து 35 ஆயிரத்து 353 ஆண் வாக்காளர்கள், 2 லட்சத்து 34 ஆயிரத்து 713 பெண் வாக்காளர்கள் மற்றும் 88 மூன்றாம் பாலினத்தினர் என மொத்தம் 4 லட்சத்து 70 ஆயிரத்து 154 பேர் வாக்களித்துள்ளனர்.
சீல் வைப்பு
இதேபோல் 6 நகராட்சிகளில் 86 ஆயிரத்து 268 ஆண் வாக்காளர்கள், 88 ஆயிரத்து 606 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தினர் 3 பேர் என மொத்தம் 1 லட்சத்து 74 ஆயிரத்து 877 பேர் வாக்களித்து உள்ளனர். மேலும் 31 பேரூராட்சிகளில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 543 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 57 ஆயிரத்து 762 பெண் வாக்காளர்கள் மற்றும் 7 மூன்றாம் பாலினத்தினர் என மொத்தம் 3 லட்சத்து 9 ஆயிரத்து 312 வாக்காளர்கள் வாக்களித்து உள்ளனர். இந்த தகவலை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கார்மேகம் தெரிவித்தார்.
இதையடுத்து வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குப்பெட்டிக்குள் எடுத்து வைத்து அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன. பின்னர் அந்த பெட்டிகள் லாரியில் ஏற்றப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
பதிவான வாக்குகள்
நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் சதவீதத்தில் வருமாறு:-
நகராட்சிகளில் ஆத்தூர்-76.46, மேட்டூர்-60.42, எடப்பாடி-83.1, நரசிங்கபுரம்-70.35, இடங்கணசாலை-89.41, தாரமங்கலம்-85.39 ஆகும்.
இதேபோல் பேரூராட்சிகளை பொறுத்தவரையில் அரசிராமணி-84.07, ஆட்டையாம்பட்டி-87.20, அயோத்தியாப்பட்டணம்-83.26, பேளூர்-84.94, ஏத்தாப்பூர்-76.10, கெங்கவல்லி-73.57, இளம்பிள்ளை-84.18, ஜலகண்டாபுரம்-79.70, கன்னங்குறிச்சி-77.95, கருப்பூர்-84.99, கீரிப்பட்டி-77.12, கொளத்தூர்-73.75, கொங்கணாபுரம்-80.40, மல்லூர்-82.23, மேச்சேரி-83.16, நங்கவள்ளி-85.58, ஓமலூர்-76.83, காடையாம்பட்டி-82.26, பனமரத்துப்பட்டி-87.48, பெத்தநாயக்கன்பாளையம்-80.99, பி.என்.பட்டி-74.18, பூலாம்பட்டி-90.39, சங்ககிரி-65.99, செந்தாரப்பட்டி-76.26, தம்மம்பட்டி-73.12, தெடாவூர்-79.88, தேவூர்-82.25, வனவாசி-83.77, வாழப்பாடி-76.97, வீரகனூர்-80.50, வீரக்கல்புதூர்-66.43.