நாகர்கோவில் மாநகராட்சியில் 60.94 சதவீதம் வாக்குப்பதிவு

நாகர்கோவில் மாநகராட்சியில் 60.94 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

Update: 2022-02-19 19:27 GMT
நாகர்கோவில், 
நாகர்கோவில் மாநகராட்சியில் 60.94 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
மாநகராட்சி தேர்தல்
நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கான தேர்தல் நேற்று நடந்தது. 100 ஆண்டுகளாக நகராட்சியாக இருந்து வந்த நாகர்கோவில் நகரம் கடந்த 2019-ம் ஆண்டு முதல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே பாரம்பரியமும், வரலாற்று சிறப்புகளையும் கொண்டதாக நாகர்கோவில் மாநகராட்சி விளங்குகிறது. 
மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டபிறகு முதல் முறையாக நேற்று மாநகராட்சி கவுன்சிலர்களுக்கான தேர்தல் நடந்தது. இந்த மாநகராட்சியில் மொத்தம் 52 வார்டுகள் உள்ளன. மொத்தம் 2 லட்சத்து 47 ஆயிரத்து 399 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வார்டுகளுக்கு 356 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது.
60.94 சதவீதம் பதிவு
காலையில் விறு, விறுப்பாக தொடங்கிய வாக்குப்பதிவு நேரம் ஆக, ஆக விறு, விறுப்பு குறைந்து, இறுதியில் 56 சதவீதம் வாக்குகளே பதிவானது. 
காலை 7 மணியில் இருந்து 2 மணி நேரத்துக்கு ஒரு முறை பதிவான வாக்கு சதவீதம் விவரம் வருமாறு:-
காலை 9 மணி நிலவரப்படி 10,530 வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர். இதன் சதவீதம் 4.26 ஆகும். 11 மணி நிலவரப்படி 47,618 வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர். இதன் சதவீதம் 19.25 ஆகும். மதியம் 1 மணி நிலவரப்படி 79,753 வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர்.            இதன் சதவீதம் 32.24 ஆகும்.
பிற்பகல் 3 மணி நிலவரப்படி 1 லட்சத்து 5 ஆயிரத்து 80 பேர் வாக்களித்திருந்தனர். இதன் சதவீதம் 42.47 ஆகும். மாலை 5 மணி நிலவரப்படி 1 லட்சத்து 34 ஆயிரத்து 432 பேர் வாக்களித்திருந்தனர். இதன் சதவீதம் 54.34 ஆகும். மாலை 6 மணி நிலவரப்படி 1,50,770 பேர் வாக்களித்திருந்தனர். மொத்தம் 60.94 சதவீத வாக்குகள் பதிவானது.

மேலும் செய்திகள்