கவச உடையில் வந்து வாக்களித்த கொரோனா நோயாளி
கவச உடையில் வந்து வாக்களித்த கொரோனா நோயாளி
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை நகரமன்றத்தில் உள்ள 18 வார்டுகளில் 30 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. கலெக்டர் அமர்குஷ்வாஹா ஜோலார்பேட்டை வக்கணம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் நடந்த வாக்குப்பதிவை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாலை 5 மணியில் இருந்து மாலை 6 மணி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வாக்காளருக்கு டோக்கன் வழங்கி வாக்குப்பதிவு நடந்தது.
அதன்படி ஜோலார்பேட்டையை அடுத்த இடையம்பட்டி காந்தி ரோட்டில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் கொரோனா நோயாளி ஒருவர் கவச உடை அணிந்து வந்து ஓட்டுப்போட்டார்.
திருப்பத்தூரில் வாக்குப்பதிவு மையங்களை மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா, தேர்தல் பார்வையாளர் பிரதீப் குமார் ஆகியோர் பார்வையிட்டனர்.
ஆம்பூர் நகரம் ஏ.கஸ்பா அரசு தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு நடந்தது.
இதனை திருப்பத்தூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அமர்குஷ்வாஹா மற்றும் மாவட்ட தேர்தல் பார்வையாளர் பிரதீப்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
வாணியம்பாடி நகராட்சியில் உள்ள 36 வார்டுகள், ஆலங்காயம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகள், உதயேந்திரம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகள் ஆகியவற்றுக்கு தேர்தல் நடைபெற்றது.
காலை 7 மணி முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் பார்வையாளர் பிரதீப்குமார், கலெக்டர் அமர் குஷ்வாஹா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
வாக்களிப்பின் போது கோணாமேடு, நேதாஜி நகர் உள்ளிட்ட சில பகுதிகளில் பதற்றம் நிலவியதால் அங்கு சென்ற மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கூட்டத்தை கலைந்து போக ஒலிபெருக்கி மூலம் அறிவித்து அவர்களை அங்கிருந்து விரட்டினார்.