வாக்குப்பதிவை முகநூலில் வெளியிட்ட தொழிலாளி

வாக்குப்பதிவை முகநூலில் வெளியிட்ட தொழிலாளியால் கம்பத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-02-19 18:08 GMT
கம்பம்:

கம்பம் நகராட்சி 8-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான வாக்குப்பதிவு, தாத்தப்பன்குளத்தில் உள்ள இல்லாஹி அரபிக் ஒரியண்டல் பள்ளியில் நடந்தது. இந்த வாக்குச்சாவடியில், அதே பகுதியை சேர்ந்த 37 வயது கூலித்தொழிலாளி ஒருவர் தனது வாக்கை பதிவு செய்தார். 

அவர், தான் வாக்குப்பதிவு செய்ததை தனது செல்போனில் படம் எடுத்தார். 
பின்னர் அவர், அந்த படத்தை முகநூலில் பதிவேற்றம் செய்தார். அதில், 8-வது வார்டில் போட்டியிடும் சுயேச்சை பெண் வேட்பாளருக்கு, தான் தென்னை மர சின்னத்தில் வாக்களித்தேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்த பதிவேற்றம், சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதனால் கம்பம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நகராட்சி தேர்தல் அலுவலர் பாலமுருகனிடம் கேட்ட போது, வாக்குப்பதிவு ரகசியமானது. 

அதனை பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பியது தேர்தல் ஆணைய விதிகளுக்கு புறம்பானது ஆகும். இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்