உள்ளாட்சி தேர்தலில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 66 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 66.68 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
66.68 சதவீதம் வாக்குகள் பதிவு
வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேலூர் மாநகராட்சியில் 58, குடியாத்தம் நகராட்சி 36, பேரணாம்பட்டு 21, ஒடுகத்தூர் பேரூராட்சி 15, பென்னாத்தூர் பேரூராட்சி 15, பள்ளிகொண்டா பேரூராட்சி 18, திருவலம் பேரூராட்சி 15 என்று மொத்தம் 178 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது.
இந்த தேர்தலில் 1,87,883 ஆண் வாக்காளர்கள், 1,97,780 பெண் வாக்காளர்கள், 11 மூன்றாம் பாலினத்தவர்கள் என்று மொத்தம் 3,85,674 வாக்காளர்கள் வாக்களித்தனர். இது 66.68 சதவீதம் ஆகும்.
மாநகராட்சி
வேலூர் மாநகராட்சியில் 65.50 சதவீதம், குடியாத்தம் நகராட்சியில் 67.35 சதவீதம், பேரணாம்பட்டு நகராட்சியில் 63.62 சதவீதம்,
ஒடுகத்தூர் பேரூராட்சியில் 78.78 சதவீதம், பள்ளிகொண்டா பேரூராட்சியில் 77.76 சதவீதம், பென்னாத்தூர் பேரூராட்சியில் 81.65 சதவீதம், திருவலம் பேரூராட்சியில் 80.07 சதவீதம் என்று மொத்தம் 66.68 சதவீதம் வாக்குகள் பதிவானது. 2 நகராட்சிகளில் 66 சதவீதமும், 4 பேரூராட்சிகளில் 79.09 சதவீதமும் வாக்குகள் பதிவாயிருக்கின்றன.
அதிகபட்சமாக பென்னாத்தூர் பேரூராட்சியில் 81.65 சதவீதம் வாக்குகளும், குறைந்த அளவாக பேரணாம்பட்டு நகராட்சியில் 63.62 வாக்குகளும் பதிவாகி உள்ளன.
மாநகராட்சி, நகராட்சிகளை விட பேரூராட்சி பகுதிகளில் அதிக ஆர்வத்துடன் பொதுமக்கள் வந்து வாக்கு செலுத்தியுள்ளனர்.