உடல் நலக்குறைவிலும் ஜனநாயக கடமையாற்றிய முதியவர்

சாத்தான்குளத்தில் உடல் நலக்குறைவிலும் முதியவர் ஒருவர் ஓட்டு போட்டு தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

Update: 2022-02-19 18:07 GMT
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆவுடையப்பன் (வயது 82). இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் படுத்த படுக்கையாக இருந்தார். இவருக்கு சாத்தான்குளம் பேரூராட்சி 1-வது வார்டில் ஓட்டுரிமை உள்ளது. நேற்று நடந்த உள்ளாட்சி தேர்தலில் அவர் ஓட்டு போட தனது விருப்பத்தை தெரிவித்தார்.

இதையடுத்து அப்பகுதி இளைஞர்கள், ஸ்டிரச்சரை ஏற்பாடு செய்து, அதில் அவரை படுக்க வைத்து சுமார் ½ கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வாக்குச்சாவடிக்கு சுமந்து வந்தனர். அங்கு அவரை ஓட்டு போட செய்தனர். உடல் நலக்குறைவிலும் ஆர்வத்துடன் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய முதியவரை அப்பகுதி இளைஞர்கள் பாராட்டினர். 

மேலும் செய்திகள்