ராமநாதபுரம்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி மதுக்கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் திருப்புல்லாணி போலீசார் தந்தூரணி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்றிருந்த ஒரு காரை சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை செய்தனர். அந்த காரில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ராமேசுவரம் எம்.ஆர்.டி.நகரை சேர்ந்த நொச்சிகுளம் போஸ் மகன் நம்புராஜ் (வயது 35), கார் டிரைவர் கீழக்கரை கோகுல்நகர் வேலு மகன் ஜெயராஜ் (40) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் காரையும், 624 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக மேலூர் டாஸ்மாக் விற்பனையாளர்கள் துளசிராஜமூர்த்தி (45), முருகேசன் (45) ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர்.