நாய்கள் கடித்து குதறியதில் 6 ஆடுகள் சாவு

நாய்கள் கடித்து குதறியதில் 6 ஆடுகள் சாவு

Update: 2022-02-19 17:11 GMT
கொள்ளிடம்:-

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சரஸ்வதிவிளாகம் கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரையையொட்டி ஆடுகள் மேய்வது வழக்கம். நேற்று சரஸ்வதிவிளாகம் கிராமத்தை சேர்ந்த வீரமுத்து என்பவருக்கு சொந்தமான ஆடுகள் மேய்ச்சலுக்கு சென்றன. அப்போது 6 ஆடுகளை அங்குள்ள நாய்கள் விரட்டி விரட்டி கடித்து குதறின. இதனால் ஆடுகள் பரிதாபமாக இறந்தன. ஆடுகளை கடித்து குதறும் வெறி நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்