ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 64 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 64 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.

Update: 2022-02-18 23:32 GMT
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 3 ஆயிரத்து 339 பேருக்கு பரிசோதனை செய்ததில் 69 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி புதிதாக மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 326 ஆக உயர்ந்தது.
மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 191 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 452 பேர் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 733 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 1,141 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் செய்திகள்