ஈரோடு மாவட்டத்தில் இன்று 9 லட்சத்து 80 ஆயிரம் பேர் வாக்களிக்கிறார்கள்
ஈரோடு மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) 9 லட்சத்து 80 ஆயிரம் பேர் வாக்களிக்கிறார்கள்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) 9 லட்சத்து 80 ஆயிரம் பேர் வாக்களிக்கிறார்கள்.
ஈரோடு மாநகராட்சி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று (சனிக்கிழமை) நகர்ப்புறங்களில் நடக்கிறது. 42 பேரூராட்சிகளிலும், 4 நகராட்சிகள் மற்றும் ஈரோடு மாநகராட்சியில் 59 வார்டுகளிலும் தேர்தல் நடக்கிறது. ஈரோடு மாநகராட்சியில் மண்டலம் 1-க்கு உள்பட்ட 15 வார்டுகளில் 51 ஆயிரத்து 908 ஆண்கள், 54 ஆயிரத்து 347 பெண்கள், 3-ம் பாலினத்தவர் 13 பேர் என 1 லட்சத்து 6 ஆயிரத்து 268 வாக்காளர்கள் உள்ளனர்.
மண்டலம் 2-ல் 55 ஆயிரத்து 592 ஆண்கள், 57 ஆயிரத்து 44 பெண்கள், 3-ம் பாலினத்தவர் 7 பேர் என 1 லட்சத்து 12 ஆயிரத்து 643 வாக்காளர்கள் உள்ளனர்.
மண்டலம் 3-க்கு உள்பட்ட 15 வார்டுகளிலும் 56 ஆயிரத்து 837 ஆண்கள், 59 ஆயிரத்து 760 பெண்கள், 3-ம் பாலினத்தவர்கள் 11 பேர் என 1 லட்சத்து 16 ஆயிரத்து 608 வாக்காளர்கள் உள்ளனர்.
மண்டலம் 4-க்கு உள்பட்ட 15 வார்டுகளில் 55 ஆயிரத்து 479 ஆண்கள், 57 ஆயிரத்து 647 பெண்கள், 3-ம் பாலினத்தவர் 11 பேர் என 1 லட்சத்து 13 ஆயிரத்து 137 வாக்காளர்கள் உள்ளனர். ஈரோடு மாநகராட்சியில் மொத்தம் ஆண்கள் 2 லட்சத்து 19 ஆயிரத்து 816 பேரும், பெண்கள் 2 லட்சத்து 28 ஆயிரத்து 798 பேரும், 3-ம் பாலினத்தவர் 42 பேரும் என மொத்தம் 4 லட்சத்து 48 ஆயிரத்து 656 வாக்காளர்கள் உள்ளனர்.
நகராட்சிகள்
கோபி நகராட்சியில் 30 வார்டுகளில் 22 ஆயிரத்து 784 ஆண்கள், 25 ஆயிரத்து 462 பெண்கள், 3-ம் பாலினத்தவர் 1 என்று 48 ஆயிரத்து 247 வாக்காளர்கள் உள்ளனர். பவானி நகராட்சியில் 27 வார்டுகளில் 14 ஆயிரத்து 664 ஆண்கள், 16 ஆயிரத்து 45 பெண்கள் என மொத்தம் 30 ஆயிரத்து 709 வாக்காளர்கள் உள்ளனர்.
சத்தியமங்கலம் நகராட்சியில் 27 வார்டுகளில் 16 ஆயிரத்து 117 ஆண்கள், 17 ஆயிரத்து 428 பெண்கள், 3-ம் பாலினத்தவர்கள் 7 பேர் என 33 ஆயிரத்து 552 பேர் உள்ளனர். புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் 18 வார்டுகளில் 8 ஆயிரத்து 221 ஆண்கள், 9 ஆயிரத்து 14 பெண்கள், 3-ம் பாலினத்தவர் 2 பேர் என 17 ஆயிரத்து 237 வாக்காளர்கள் உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 4 நகராட்சிகளையும் சேர்த்து மொத்தம் 1 லட்சத்து 29 ஆயிரத்து 745 வாக்காளர்கள் உள்ளனர்.
பேரூராட்சிகள்
42 பேரூராட்சிகளிலும் சேர்த்து மொத்தம் 1 லட்சத்து 95 ஆயிரத்து 438 ஆண்களும், 2 லட்சத்து 10 ஆயிரத்து 560 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 14 பேரும் என 4 லட்சத்து 60 ஆயிரத்து 12 வாக்காளர்கள் உள்ளனர்.
இவ்வாறு ஈரோடு மாவட்டத்தில் உள்ள 792 நகர்ப்புற வார்டுகளிலும் 9 லட்சத்து 84 ஆயிரத்து 413 பேர் வாக்காளர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதில் ஈரோடு மாநகராட்சி 51 வது வார்டு, பேரூராட்சிகளில் 20 வார்டுகள், வேட்பாளர் மரணத்தால் தள்ளிவைக்கப்பட்ட 2 வார்டுகளுக்கு இன்று தேர்தல் நடைபெறாது. எனவே சுமார் 9 லட்சத்து 80 ஆயிரம் பேர் வாக்களிக்க உள்ளனர்.