218 வாக்குச்சாவடிகள் கேமரா மூலம் கண்காணிப்பு
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 218 வாக்குச்சாடிகள் கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.
நெல்லை:
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 218 வாக்குச்சாடிகள் கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.
உள்ளாட்சி தேர்தல்
நெல்லை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. 923 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
நெல்லை மாநகராட்சி, 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகளில் மொத்தம் 923 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 274 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ஆகும்.
கண்காணிப்பு கேமரா
அவற்றில் 218 வாக்குச்சாவடிகளில் நேற்று தேர்தல் பணியாளர்கள் வெப் கேமராக்களை பொருத்தினர். உடனடியாக அவை நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டது. வாக்குச்சாவடிகளில் என்ன நடக்கிறது? என்பதை கலெக்டர் விஷ்ணு நேற்று கட்டுப்பாட்டு அறையில் இருந்து பார்வையிட்டார்.
மீதமுள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் நுண் பார்வையாளர்கள் மூலமும், கண்காணிப்பு கேமரா பதிவு மூலமும் கண்காணிக்கப்படுகிறது, என்று கலெக்டர் விஷ்ணு கூறினார்.