கர்நாடகத்தில் புதிதாக 1,333 பேருக்கு கொரோனா

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

Update: 2022-02-18 20:05 GMT
பெங்களூரு: கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று 83 ஆயிரத்து 355 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் புதிதாக 1,333 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் பெங்களூருவில் மட்டும் 705 பேர் உள்ளனர். கொரோனா பாதிப்பு விகிதம் 1.59 ஆக உள்ளது. ஒரே நாளில் 4,890 பேர் குணம் அடைந்தனர். மாநிலத்தில் 16 ஆயிரத்து 184 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். இதில் பெங்களூருவில் 7,600 பேர் இருக்கிறார்கள். ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் சிகிச்சை பலனின்றி 19 பேர் உயிரிழந்தனர். இதில் பெங்களூருவில் 9 பேர் அடங்குவர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்