215 உள்ளாட்சி பதவிகளுக்கு 848 பேர் களத்தில் உள்ளனர்

திருவாரூர் மாவட்டத்தில் 215 உள்ளாட்சி பதவிகளுக்கு 848 பேர் களத்தில் உள்ளனர்.

Update: 2022-02-18 18:06 GMT
திருவாரூர்;
திருவாரூர் மாவட்டத்தில் 215 உள்ளாட்சி பதவிகளுக்கு 848 பேர் களத்தில் உள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர் ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் பேரளம், நன்னிலம், குடவாசல், கொரடாச்சேரி, வலங்கைமான், நீடாமங்கலம், முத்துப்பேட்டை ஆகிய 7 பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. 
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சி தேர்தலில் 73 ஆயிரத்து 446 ஆண் வாக்காளர்கள், 80 ஆயிரத்து 684 பெண் வாக்காளர்கள் மற்றும் 3-ம் பாலினத்தவர் 7 பேர் என மொத்தம் 1 லட்சத்து 54 ஆயிரத்து 137 வாக்காளர்கள் உள்ளனர். 7 பேரூராட்சிகளில் 32 ஆயிரத்து 988 ஆண் வாக்காளர்கள், 35 ஆயிரத்து 343 பெண் வாக்காளர்கள் மற்றும் 3-ம் பாலினத்தவர் 3 பேர்  என மொத்தம் 68 ஆயிரத்து 334 வாக்காளர்கள் உள்ளனர்.
848 பேர் 
4 நகராட்சி மற்றும் 7 பேரூராட்சிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்  மொத்தம் 2 லட்சத்து 22 ஆயிரத்து 471 வாக்காளர்கள் உள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் 4 நகராட்சி, 7 பேரூராட்சிகளில் உள்ள 216 வார்டு பதவிக்கான தேர்தலில் ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.  215 பதவிகளுக்கு 848 பேர்  களத்தில் உள்ளனர். வாக்கு எண்ணிக்கை வருகிற 22-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. 

மேலும் செய்திகள்