வேலூர் சரகத்தில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார். டி.ஐ.ஜி. ஆனிவிஜயா தகவல்

வேலூர் சரகத்தில் உள்ள வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக டி.ஐ.ஜி. ஆனி விஜயா கூறினார்.

Update: 2022-02-18 18:06 GMT
குடியாத்தம்

வேலூர் சரகத்தில் உள்ள வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக டி.ஐ.ஜி. ஆனி விஜயா கூறினார்.

டி.ஐ.ஜி. ஆய்வு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இந்த நிலையில் குடியாத்தம் நகராட்சியில் தேர்தல் பாதுகாப்பு பணிகளை வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா நேற்று ஆய்வு செய்தார். குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் இருந்து வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தார். தொடர்ந்து ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆய்வின்போது குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, குடியாத்தம் நகராட்சி ஆணையாளரும் தேர்தல் அலுவலருமான இ.திருநாவுக்கரசு, நகராட்சி பொறியாளர் சிசில் தாமஸ் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
தொடர்ந்து டி.ஐ.ஜி. ஆனி விஜயா கூறியதாவது:-

பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேலூர் சரகத்தில் உள்ள வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர், ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பிரச்சினைக்குரிய வாக்குச்சாவடி மையங்கள் கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அப்குதியில் ரோந்து பணியிலும் போலீசார் ஈடுபடுகின்றனர். 

வாக்குச்சாவடி மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்கள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அச்சமின்றி பாதுகாப்புடன் வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்