குளித்தலை
குளித்தலை நாப்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில் அங்கு சென்ற போலீசார் அப்பகுதியில் வைத்து மது விற்ற திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள தாண்டவம்பட்டி பகுதியைச் முத்துக்கருப்பன் (வயது 56) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 6 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புகழூர் அருகே மூலிமங்கலம் பிரிவு ரோடு பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்குள்ள மறைவிடத்தில் மதுபாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து மது விற்ற மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வள்ளுவகுடி தெற்கு தெருவைச் சேர்ந்த சந்திரகாசன் மகன் ஸ்ரீராம் (31) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.