275 உறுப்பினர்களை தேர்வு செய்ய தயார் நிலையில் 420 வாக்குச்சாவடிகள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 275 உறுப்பினர்களை தேர்வு செய்ய 420 வாக்குச்சாடிகள் வாக்குப்பதிவுக்கு தயார் நிலையில் உள்ளன.
சிவகங்கை,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 275 உறுப்பினர்களை தேர்வு செய்ய 420 வாக்குச்சாடிகள் வாக்குப்பதிவுக்கு தயார் நிலையில் உள்ளன.
தேர்தல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தேர்தல் பார்வையாளர் ஆலோச னையின்பேரில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகளில் காலியாக உள்ள 275 உறுப்பினர்களை தேர்வு செய்ய வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக மாவட்டத்தில் 420 வாக்குச ்சாவடிகள் அமைக்கப் பட்டு தயார்நிலையில் உள்ளன.
இதையடுத்து நேற்று அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக சாய்வு தளம், சக்கர நாற்காலி ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
தடையில்லா மின்சாரம்
இதுதவிர வாக்குச்சாவடிகளில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, தடையில்லா மின்சார வசதி செய்யப்பட்டு உள்ளது.
இன்று தேர்தல் முடிவடைந்வுடன் வாக்குச்சாவடிகளில் பதிவாகிய வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு எந்திரங்கள் சிவகங்கை, திருப்பத்தூர்் காரைக்குடி மற்றும் தேவகோட்டை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும். இங்கு அதற்கான அறைகளின் முன்பாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
சுழற்சி முறை
இந்த மையங்களில் 12 மணி நேரங்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் 68 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடு கின்றனர். ஒரு ஷிப்டில் ஒரு இன்ஸ்பெக்டர் 6 சப்-இன்ஸ் பெக்டர்கள் மற்றும் 27 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.