25 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு

திருப்புவனம் பேரூராட்சியில் 25 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Update: 2022-02-18 17:23 GMT
திருப்புவனம், 
திருப்புவனம் தேர்வுநிலை பேரூராட்சிக்கு நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 18 வார்டுகளுக்கு மொத்தம் 62 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 18 வார்டுகளுக்கும் சேர்த்து 25 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குச்சாவடி மையங்கள் 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டும் அதிகாரிகள் நியமிக்கப் பட்டு உள்ளனர். மண்டல அதிகாரிகள் தங்கள் பகுதி வாக்குச்சாவடிகளுக்கு அடையாள மை, முக கவசம், கிருமிநாசினி உள்பட அனைத்து பொருட்களையும் போலீஸ் பாதுகாப்புடன் தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து கொண்டு சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் மண்டல பொறுப்பாளர் ஜினு, தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயராஜ் ஆகியோர் செய்தனர். இதேபோல் வாக்குச்சாவடி மையத்தில் இருந்து 200 மீட்டர் அளவை குறிக்க வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள அனைத்து சாலையிலும் எல்லைகோடு வரையப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்