‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
திண்டுக்கல்:
கிடப்பில் போடப்பட்ட கால்வாய் பணி
சின்னமனூர் நகராட்சி 18-வது வார்டு பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. அதன் பின்னர் அந்த பணி பாதியில் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் சாக்கடை கால்வாய் வசதி கிடைக்காமல் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே கிடப்பில் போடப்பட்ட சாக்கடை கால்வாய் பணியை விரைவில் தொடங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவாஜி, சின்னமனூர்.
சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்
கொடைக்கானல் தாலுகா வில்பட்டி அண்ணா ராமசாமிநகர் பகுதியில் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்தோஷ், வில்பட்டி.
சாக்கடை கால்வாயில் அடைப்பு
திண்டுக்கல் மாநகராட்சி 11-வது வார்டு காமராஜபுரத்தில் உள்ள சாக்கடை கால்வாயில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் கால்வாயிலேயே தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்படாமல் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வம், திண்டுக்கல்.
பஸ் நிலையம் வேண்டும்
வடமதுரையில் பஸ் நிலையம் அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். நகர் பகுதியில் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு அங்கு பஸ் நிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்குமார், வடமதுரை.