விஷம் குடித்து மூதாட்டி சாவு

திருமருகல் அருகே விஷம் குடித்த மூதாட்டி உயிரிழந்தார்.

Update: 2022-02-18 16:40 GMT
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியம் இடையாத்தாங்குடி ஊராட்சி கணபதிபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் தெட்சிணாமூர்த்தி. இவருடைய மனைவி பட்டம்மாள் (வயது 75).இவர் கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் பட்டம்மாள் வீட்டில் விஷத்தை குடித்து விட்டு மயங்கி கிடந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பட்டம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருக்கண்ணபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்